நான்காவது ஆண்டில் பிரமாண்டமான தெருவிழா ஆகஸ்ட் 24, 25 இல் தமிழர் படையெடுக்கும் திருவிழா

கனடா . August, 24 2019

news-details

இந்தியக் கண்டத்திற்கு வெளியே 350 ஆயிரத்திற்கு மேல் தமிழ் மக்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படும் இந்தப் பிரமாண்டமான தெருவிழா , டொரோண்டோ பெரும்பாகத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 24ஆம் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
கனடாவில் மிக மிக வேகமாக வளர்ந்து வரும் தமிழர்களின் ஆயிரக் கணக்கான பல்துறை வியாபார தொழில்நுட்ப மற்றும் உணவுச் சாவடிகளும் என களை கட்ட இருக்கும் இந்த திருவிழாவில் களியாட்ட மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறஉள்ளன .
இந்தத் தெருவிழா Markham Road இல் Mc Nicoll to Passmore ற்கிடையில் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.