கனடா . July, 03 2019
தாய்மண்ணின் முல்லைத்தீவிலிருக்கும் உள்ளுர் உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளின் தரத்தை, சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான அபிவிருத்திக் கூட்டமும் இராப்போசன விருந்தும், கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், 2-7-2019 செவ்வாய்க்கிழமை மாலை Toronto வில் உள்ள JC'S மண்டபத்தில், கனடியத் தமிழர் பேரவைத் தலைவர் திரு இளங்கோ அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முல்லைத்தீவிலுள்ள உள்ளூர் உற்பத்திகளை மாவட்டத்துக்கு வெளியே சந்தைப்படுத்துதலுக்கு உதவும் முகமாக ஒரு விற்பனை மற்றும் தகவல் மையத்தை நிறுவுவதற்கான வேலைத்திட் டத்தைப் பற்றி வடக்கு-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி மையத்தின் திட்ட முகாமையாளர் திரு சுதன் கந்தையா அவர்கள் விளக்கிக் கூறினார் .
கனடா வாழ் தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் மதிப்புக்குரிய இமானுவேல் ஆர்னோல்ட்
அவர்களும், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மருத்துவரும் ஆன திரு பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரைகள் ஆற்றினர்.
இந்தக் கூட்டம் முல்லைதீவு மாவட்ட உற்பத்தியாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு புது வெளிச்சம் பாய்ச்சும் என்பதில் ஐயமில்லை.