வெற்றிகரமாக நடைபெற்ற தொழில்முறை இணையத்தள இணையத்தினரின் பொறிமுறை ஒன்றுகூ டல்.

கனடா . June, 17 2019

news-details

கனடியன் தமிழ் தொழிற்திறன் இணையம்(Canadian Tamil Professional Association), கனடியன் தமிழ் காங்கிரஸ்(Canadian Tamil Congress), தலைமைத்துவம் மற்றும் கண்டுபிடிப்புக்கான மத்திய நிலையம்(Center for Leadership and Innovation) ஆகிய அமைப்புகளின் இணையப் பொறிமுறை முன்னேற்றம் தொடர்பான ஒன்றுக்கூடல் ஒன்று 9/6/2019 ஞரயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 9:00 மணிவரை Scarborough Netwyn Place இல் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் UK இல் வருகை தந்த பிரமுகர் திரு பேனாட் சின்னையா(Mr Bernard Sinniah) மற்றும் Trinity Tech இலிருந்து Mr. Dunstan Peter ஆகியோர் பிரதம பேச்சாளர்களாகக் கலந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 150 தமிழ் தொழில் நிபுணத்துவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த ஒன்றுகூடலில், பொறிமுறை முன்னேற்ற அனுபவங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும், மேற்கொண்டு முன்னேறுவதற்கான தரவுகளும் பிரதம பேச்சாளர்களால் முன்வைக்கப்பட் டன. இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு பயனுள்ள தகவல் பரிமாற்றமாக நடைபெற்ற இந்நிகழ்வில், அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.