கனடிய தமிழ்க் காங்கிரசின் ஏற்பாட்டில், கனடாப் பாராளுமன்ற வளாகத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற, முள்ளிவாய்க்கால் நினைவு.

கனடா . May, 16 2019

news-details

நேற்று 15-5-2019 புதன்கிழமை மாலை 6 மணிக்கு முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 10 வது ஆண்டு நினைவு உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப் பட் டது, கனடிய தமிழ்க் காங்கிரசின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவில் குறிப்பாக 20 க்கும் மேற்பட்ட LIBERAL, NDP, CONSERVATIVE ஆகிய கட் சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டமையானது பெருமைக்குரிய விடயமாகும். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் சமாதான நாடான கனடா மண்ணில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நடைபெறுவது கனேடியத் தமிழர்களுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது,

தமிழர் தாயகத்தில் முப்பது வருட இன அழிப்பின் வடுக்கள் மாறாத நிலையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிட்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்வின் மூலம் பெறமுடிகிறது. இந்த நிகழ்வில் கலந்த கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் இதனைப் பறைசாற்றுகின்றன. தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சிகளுக்கு கனடிய அரசும் மக்களும் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியை வழங்கினர்.

கனடியத் தமிழ் காங்கிரசின் தலைவர் திரு இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏற்றப் நினைவுத் தீபத்தின் முன் அனைவரும் அமைதி வணக்கம் செய்ததுடன் மலர்த்ததூவி வணக்கம் செய்தனர். கனடிய அரசின் சார்பில் கலந்து கொண்டவர்களில் ஹரி ஆனந்தசங்கரி எம்பி அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.