கனடா . May, 12 2019
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் 10 வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில், யுத்தத்தினால் உயிரிழந்த அப்பாவி உயிர்களை நினைவுகூர அன்றைய தினம் ரொறன்ரோ நகரில் ஒன்றுகூடுவோம் என கனடாவின் ரொறன்ரோ நகர மேயர் ஜோன் டொரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் விளைவாக அப்பாவி பொதுமக்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதுடன், பலர் இடம்பெயர வேண்டியேற்பட்டதுடன், இன்னும் பலர் புகலிடம் கோரி அகதிகளாக வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி அவர்களை நினைவுகூர்வதுடன், இத்தகைய மோசமான சம்பவங்கள் இனியொருபோதும் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்தவும், ஏற்கனவே நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான நீதிகோரும் போராட்டத்தை தொடர்வதற்கும் ஒன்றிணைவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.