உச்சதை தொட்ட ஒட்டவா ஆறு அடுத்த 24-மணி நேரத்தில் மூழ்கும் அபாயம்!

கனடா . May, 02 2019

news-details

கனடாவில் ஒட்டவா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அடுத்த 24 மணி முதல் 48 மணி நேரங்களில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கியூபெக், ஒன்டாரியோ மற்றும் நியூ பிரன்ஸ்விக் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட்டுள்ளதால், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், குறித்த பகுதியில் மே மாதத்திற்கு மேலாக பிரிட்டானியாவில் 2017-ஆண்டில் 41 செ.மீ. அதிகமாகவும் மற்றும் ஹல் மெரினாவில் 2017 அளவை விட 15 செ.மீ அதிகமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குறித்த பகுதியில் வெள்ள பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.