மகப்பேற்று விடுமுறை சட்டத்தில் மாற்றம்: சஸ்கச்சுவான் அரசாங்கம் அறிவிப்பு

கனடா . April, 02 2019

news-details

மகப்பேற்று விடுமுறை தொடர்பான சட்ட விதிகளை சஸ்கச்சுவான் அரசாங்கம் மாற்றியுள்ளது.

அத்துடன், தமது குழந்தைகளை வேலைத்தளத்திற்கு அழைத்து வருவதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்ட மாற்றங்களை ஆளும் சஸ்கச்சுவான் கட்சி மற்றும் கனடாவின் புதிய ஜனநாயக கட்சி ஆகியன ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்த புதிய சட்ட மாற்றமானது பல பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதற்கு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.