வேலையை இழக்கும் பணியாளர்களுக்கு புதிய வேலை - டக் ஃபோர்ட் திட்டம்

வர்த்தகம் . January, 01 2019

news-details

ஒஷாவாவில உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை, மூடப்படுவதனால், வேலையை இழக்கும் பணியாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை தேடிக் கொடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் மோட்டர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படுவதனால், 2,500 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பைத் தேடிக் கொடுப்பதே தற்போதய தேவை எனவும், அதற்கு தேவையான உதவிகளை தாம் மேற்கொள்வதாகவும் முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் குறித்த பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் தலைவர், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் சரியாக செயற்படவிலலை எனவும் டக் ஃபோர்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த இந்த பணியாளர்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கும் அதிகாரம் மிக்க நபர்கள் அனைவரும், குறித்த இந்த நிறுவனம் மூடப்படுவது நிறுத்தப்பட மாட்டாது என்பதனை தனிப்பட் ரீதியில் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலாக காபன் வரித் திடடத்தினை இல்லாது செய்வதன் மூலம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்ராறியோவுக்கு மட்டுமின்றி, முழு நாட்டு மக்களுக்கும் பெருமளவு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.