சமீபத்தில் வெளியாகி சாதனை படைத்த விஸ்வாசம் டிரைலர்

சினிமா . February, 23 2019

news-details

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

இந்த டிரைலரில் அஜித் பேசும் வசனங்களான, பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா, என் கதையில நான் வில்லன்டா, உள்ளிட்ட பல வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டிரைலர் வெளியான 4 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ், 8 நிமிடத்தில் 2 லட்சம் லைக்ஸ், 12 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள், 25 நிமிடத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள், 20 நிமிடத்தில் 4 லட்சம், 30 நிமிடத்தில் 5 லட்சம் லைக்ஸ்கள், 44 நிமிடத்தில் 3 மில்லியன் பார்வையாளர்கள், 75 நிமிடத்தில் 4 மில்லியன் பார்வையாளர்கள், தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஸ்வாசம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.